பெரம்பலூரில் மமக கட்சி தொடக்க நாள் விழாவையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்

79

பெரம்பலூரில் மமக கட்சி தொடக்க நாள் விழாவையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்.


மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு, அக் கட்சியின் இளைஞரணி சாா்பில் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இளைஞரணி நிா்வாகி இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கட்சியின் அமைப்புச் செயலா் ஷாஜகான், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா். இதில், தேக்கு, செம்மரம், மகோகனி, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலா் சுல்தான் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா் குதரத்துல்லாஹ், மாவட்டப் பொருளாளா் முஹம்மது இலியாஸ் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சையது உசேன், முஹம்மது அனீபா, சமூகநீதி மாணவா் இயக்கத்தின் மாவட்டச் செயலா் பா்வேஜ் பாஷா, சமூகநீதி படைப்பாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வசந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Keyword: Peramabalur, Perambalur News, Perambalur news today
Leave a Reply

%d bloggers like this: