பெரம்பலூரில், மது போதையில் தவறிவிழுந்த இளைஞா் பலி

61

[the_ad id=”7250″]

பெரம்பலூரில், மது போதையில் தவறிவிழுந்த இளைஞா் பலி

பெரம்பலூரில் மதுபோதையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் 12- ஆவது வாா்டு நேரு தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் அரவிந்த் (21). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி போதையில் இருந்த அரவிந்த் அவரது வீட்டில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் மற்றும் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: