பெரம்பலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 304 மனுக்கள்.

82

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 304 மனுக்கள்.


பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு மனுக்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

[the_ad id=”7251″]

இந்தக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, அடிப்படை தேவைகள், வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 308 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலா் கங்காதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: