பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம்

54

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம்


உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி தலைமை தாங்கினார். இதில் தலைமை நீதித்துறை நடுவர் கிரி, மாவட்ட சட்ட ஆணைக்குழுவின் செயலாளரும் மற்றும் சார்பு நீதிபதியுமான வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் கருப்பசாமி, அசோக் பிரசாத் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜகோபால், மணிவேல், கண்ணையன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன் பொறுத்த வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

[the_ad id=”7251″]

663 வழக்குகள் தீர்வு

இதில் 146 வங்கி வழக்குகளில் ரூ.67 லட்சத்து 33 ஆயிரத்து 9-க்கும், 42 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது. 7 சிவில் வழக்குகளில் ரூ.29 லட்சத்து 69 ஆயிரத்து 39-ம், 468 சிறு குற்ற வழக்குகளில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 150-க்கும் என மொத்தம் 663 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 67 லட்சத்து 37 ஆயிரத்து 198-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரர்களுக்கு பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் கருணாநிதி ந‌‌ஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார்.
[the_ad id=”7251″]
இதில் வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, வக்கீல்கள் திருநாவுக்கரசு, எஸ்.மணிவண்ணன், முகமது இலியாஸ், இளவரசன், பெரியசாமி, கோவிந்தராஜ், ஆர்.மணிவண்ணன், புகழேந்தி, சுகுமாறன், ராஜேந்திரன், ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: