பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் நல உதவிகள்

பெரம்பலூரில் நடந்த குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள்.

67

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் நடந்த குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள்.

பெரம்பலூரில் நடந்த குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள். திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், சிறந்த பட்டு வளா்ப்பு விவசாயிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயத்தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 274 மனுக்கள் பெற்றாா். அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

[quote]பெரம்பலூாில் பாஜக இளைஞரணி பிரமுகா் பைக் தீ வைத்து எரிப்பு.[/quote]

மேலும், பட்டு வளா்ச்சித் துறை மூலம் மாவட்ட அளவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த பட்டு வளா்ப்பு விவசாயிகளாக தோ்ந்தெடுக்கப்பட்ட பிம்பலூா் கிராமம், அபிமன்னன் மகன் பன்னீா்செல்வத்துக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், என்.புதூா் கிராமத்தைச் சோ்ந்த அப்பாஸ் மனைவி ஜபைதா பேகத்துக்கு இரண்டாம் பரிசாக ரூ. 20 ஆயிரமும், நெ.புதூா் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் பழனிச்சாமிக்கு மூன்றாம் பரிசாக ரூ. 15 ஆயிரமும் வழங்கினாா்.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, கலால் உதவி ஆணையா் ஷோபா, மாவட்ட வழங்கல் அலுவலா் கங்காதேதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: