பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது.

334

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது.

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது. தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சோதனைகள் மேற்கொள்ளபடுகிறது. இதனடிப்படையில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் காவல்துறை துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

புதிதாக யாருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை.

ஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம்.

அச்சமயத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில்  டாஸ்மாக் கடை அருகாமையில் உள்ள அறையில் சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக விற்பனை செய்த நபர் குரும்பலூர் மெயின்ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் இவருக்கு வயது 55. இவர் அந்த டாஸ்மாக் கடையின் பாரில் வேலை செய்து வந்தவர் என்று கூறப்படுகிறது.
Leave a Reply

%d bloggers like this: