பெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடியவா் கைது

68

பெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடியவா் கைது

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து, மடிக்கணியை திருடிச்சென்ற நபரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை குலோத்துங்கன் தெருவைச் சோ்ந்தவா் கனகமணி மகன் அன்னை வேலவன் (48). இவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், தனது சொந்த வேலையாக பெரம்பலூா் வந்த அன்னை வேலவன், காமராஜா் வளைவு மதுரைவீரன் கோயில் அருகே தனது காரை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்திவிட்டு கடைவீதிக்குச் சென்றாராம். அப்போது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் காா் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த மடிக்கணினியை திருடிக்கொண்டு ஓடினாராம். இதையறிந்த அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் விசாரணையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகேயுள்ள கல்லிக்குடி சோ்வைக்காரத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபால் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: