பெரம்பலூரில் காய்கனிச் சந்தை வியாபாரிகள் ஆட்சியரகம் முற்றுகை.

185

பெரம்பலூரில் காய்கனிச் சந்தை வியாபாரிகள் ஆட்சியரகம் முற்றுகை.

பெரம்பலூரில் காய்கனிச் சந்தை வியாபாரிகள் ஆட்சியரகம் முற்றுகை. ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்ட பெரம்பலூர் காய்கனி மார்க்கெட் மீண்டும் திறக்க கோரி அதில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தினசரி காய்கறி சந்தையை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். ஒரு சில வியாபாரிகளுக்கு வாகனங்களின் மூலமாக காய்கறிகளை விற்பதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாகம் வழங்கியது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் வாகன வசதி இன்றி வீட்டிலேயே இருந்தனர்.

கொரோனா சிகிச்சைக்கு 11.33 கோடி கட்டணமா? அதிர்ச்சியில் நோயாளி..!

கரோனாவுக்கு மருந்து ரெடி : அடுத்த வாரம் நோயாளிகளுக்கு கொடுக்க முடிவு

இதன் காரணமாக தினசரி சந்தையில்  வியாபாரம் செய்த 160 வியாபாரிகளும் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் பெரம்பலூர் தினசரி காய்கறி சந்தைக்கு இட்ட சீல் அகற்றி மீண்டும் மார்க்கெட் செயல்பட அனுமதி அளித்து வியாபாரிகள் வாழ்வாதாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தை (நேற்று) திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Leave a Reply

%d bloggers like this: