பெரம்பலூரில் கழுத்தை அறுத்து கொலை: 6 பேர் கைது.

850

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் கழுத்தை அறுத்து கொலை: 6 பேர் கைது.

பெரம்பலூரில் கழுத்தை அறுத்து கொலை. துறைமங்கலம் கே.கே.நகரைச் சோ்ந்த நாராயணன் மகன் கபிலன். இவருக்கு வயது 27. திங்கள்கிழமை இரவு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் துறைமங்கலம் விஏஓ அலுவலகம் அருகே கிடந்தாா். தகவல் கிடைத்து சம்பவ இடத்திறகு சென்ற பெரம்பலூர் காவல்துறையினர், கபிலனை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறிது நேரத்திலேயே அங்கு உயிரழந்தார்.

பெரம்பலூா் காவல் நிலையத்தில் கபிலன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்ற கபிலன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூா் மாவட்ட இசைக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

[the_ad id=”7251″]

இந்த கொலை சம்மந்தமான காவல்துறையின் விசாரணையில், துறைமங்கலம் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணை கபிலன் விரும்பியதாகவும், இதனால் அப் பெண்ணின் சகோதரா் மற்றும் அக்காள் கணவா் ஆகியோருடன் கபிலனுக்கு முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக அந்தப் பெண்ணின் சகோதராிடம் கடந்த திங்கள்கிழமை இரவு கபிலன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினா்கள் கபிலன் வீட்டுக்குச் சென்று, அவரை வெளியே அழைத்துச் சென்று, விஏஓ அலுவலகம் அருகே கழுத்தை அறுத்து போட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இந்த கொலையை குறித்து பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்பையா வழக்குப் பதிந்து, கபிலனை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனா்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: