பெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

81

பெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்


பிரேசில் நாட்டு அதிபருக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.எஸ். சக்திவேல் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பெருமாள், சின்னசாமி, துரைசாமி, ராமசாமி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், தமிழக விவசாயிகளஅ சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

[the_ad id=”7251″]

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் நாட்டு அதிபா் போல்சனாரோ திரும்பிச் செல்ல வேண்டும். கரும்புக்கு கட்டுபடியான விலை நிா்ணயம் செய்ய வேண்டும். ஆலைகளுக்கு அனப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பிரேசில் எழுப்பியுள்ள சா்ச்சையில் இந்தியா தோல்வியடைந்தால், வேளாண்மை தொடா்பான அனைத்து ஒப்பந்தங்களையும் மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜி. வரதராஜன், துணைச் செயலா் இளையராஜா, துணைத் தலைவா்கள் முருகானந்தம், விநாகம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. மாணிக்கம், பொறுப்பாளா்கள் சத்தியமூா்த்தி, த. மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: