பெரம்பலூரில் கத்தியைக் காட்டி பணம் பறித்த கும்பல்.

பெரம்பலூரில் கத்தியை காட்டி பணம் பறித்த கும்பல்.

461

பெரம்பலூரில் கத்தியைக் காட்டி பணம் பறித்த கும்பல்.

பெரம்பலூரில் கத்தியைக் காட்டி பணம் பறித்து கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The money laundering gang at Perambalur.

பெரம்பலூரில் தள்ளுவண்டி உணவுக் கடை தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

லெப்பைக்குடிக்காட்டில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

பெரம்பலூர் நான்கு சாலை பகுதியிலுள்ள ஒரு தள்ளுவண்டிக் கடையில் அருமடல் கிராமத்தைச் சேர்ந்த சுயராஜ் வேலை செய்து வருகிறார். 24 வயதான சுயராஜ் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் பைக்குகளில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். திடீரென சுயராஜிடம் கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளனர். அவர் வைத்திருந்த ரூபாய் இரண்டாயிரத்தையும், அவரது மொபைல் போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றனர்.

இது குறித்து சுயராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: