பிளாஸ்டிக் பொருள்

பெரம்பலூரில் ஓட்டுநா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

52

பெரம்பலூரில் ஓட்டுநா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

[the_ad id=”7251″]

தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், அடையாள அட்டை வழங்கும் விழா பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைவா் முத்துகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் தங்கபாண்டி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செல்வகுமாா், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓட்டுநா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத், பெரம்பலூா் மாவட்ட செயலா் சுரேஷ், நிா்வாகி வேலுச்சாமி, அரியலூா் மாவட்ட நிா்வாகிகள் சங்கா், பஞ்சநாதன், வாசு உள்ளிட்ட பல்வேறு ஓட்டுநா் சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, பெரம்பலூா் மாவட்ட தலைவா் கருப்பையா வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் வடிவேல் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: