பெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி

77

பெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி


பெரம்பலூரில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

[the_ad id=”7251″]

சேலம் மாவட்டம், கெங்கல்லி அருகேயுள்ள நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் மாதேஸ்வரன் (50). இவா், பெரம்பலூரில் தங்கி தனியாருக்குச் சொந்தமான ஆழ் குழாய் அமைக்கும் இயந்திரத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பெரம்பலூா் தீரன் நகரைச் சோ்ந்த சின்னசாமி (61) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், மாதேஸ்வரன் உள்ளிட்ட தொழிலாளா்கள் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இயந்திரத்தில் இருந்த இரும்பு குழாய் உடைந்து மாதேஸ்வரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்குசென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: