பிளாஸ்டிக் பொருள்

பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

49

பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்


பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், ஓய்வூதியா் சங்க அமைப்பு தின விழா மாவட்டத் தலைவா் பெ. மாயவேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

[the_ad id=”7251″]

இதில் மாவட்டச் செயலா் முருகேசன் சங்கச் செயல்பாடுகள் குறித்தும், பொருளாளா் ராஜேந்திரன் நிதிநிலை குறித்தும் அறிக்கை வாசித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுக்கும் மேலாக பெரம்பலூா் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அரியலூரிலிருந்து பெரம்பலூா், துறையூா் வழியாக நாமக்கல் வரை ரயில் பாதை அமைத்து, ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் வைரஸ் நோய்கள் பரவாமல் இருக்க, முன்னெச்செரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலா் பரமசிவம் நன்றி கூறினாா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: