பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

320

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனைகளால் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவினால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்தும் கடந்த ஏப்ரல் மாதம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. மே மாதத்திற்கான ஊதியம் வழங்குவதற்கு சென்ற ஆண்டு சராசரி அடிப்படையில் வருகை பதிவேடு வழங்குவது என்றும் மீதி நாட்களை சொந்த விடுப்பில் கழிப்பது, விடுப்பு இல்லாவிட்டால் சம்பளமில்லா விடுப்பாக கருதி ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது என்ற அடிப்படையில் போக்குவரத்துக் கழகம் தன்னிச்சையாக முடிவு செய்து அதன் அடிப்படையில் ஊதியப் பட்டியல் தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. பணிமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் செய்யாமல் டெக்னீஷியன்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணிக்கு வரும்படி அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

கோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

இதனை கண்டித்தும் பணிமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரக் கோரியும் மே மாதத்திற்கான ஊதியத்தை பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டியும் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 31.05.2020 (நேற்று) காலை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவரும், பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவருமான குமார் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பணியாளர் சம்மேளனம் அம்பேத்கர் போக்குவரத்து விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Leave a Reply

%d bloggers like this: