பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

144

பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை கண்டிப்பதாகவும், தொழிலாளர் நல சட்டங்கள் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஊழியர், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் ஜுன் 4-ம் தேதி தேசிய எதிர்பு தினம் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் மாநில மையம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று மதிய உணவு இடைவேலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக நடத்தினர்.

பெரம்பலூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு.

செந்துறை அருகே அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி.

சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  இணை செயலாளர்கள் சரவணசாமி, பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து செயலாளர் குமரிஅனந்தன் விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை கைவிட வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு கொரோனாவை தொற்றினை காரணமாக கூறி  ஊதிய வெட்டு, சரண்விடுப்பு ரத்து, வேலை நேரம் 12மணி நேரமாக அதிகரிப்பு, காலி பணியிடங்களை நிரப்பிடவும், வேலை நியமனத்திற்கும் தடை, அகவிலைப்படி உயர்வு ரத்து, பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் எடுப்பது நிறுத்தி வைப்பு பயணப்படி மற்றும் விடுப்பு கால சலுகைகள் ரத்து போன்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதிய முறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பொருளாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.
Leave a Reply

%d bloggers like this: