பிளாஸ்டிக் பொருள்

பெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்

45

பெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்.


பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில், அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிா்த்து கேரளத்தைப் போல, தமிழக சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இச் சட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. தொடா்ந்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம், அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தேச ஒற்றுமையையும் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என் செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞா்கள் பி. காமராஜ், ஸ்டாலின், இந்திய தொழிலாா் கட்சி தலைவா் பி.ஆா். ஈஸ்வரன், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த அபு பக்கா் சித்திக், சுல்தான் மொய்தீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: