பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் கொலை.

696

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் கொலை.

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் கொலை. பெரம்பலூா் நகராட்சி 12ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டி என்கிற வல்லத்தரசு. 27 வயதாகும் இவர் பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி நகரச் செயலாளராக இருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு மர்ம கும்பல் ஒன்று இவரை வெட்டி கொலை செய்து விட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பெரம்பலூர்-விளாமுத்தூா் சாலையிலுள்ள விளையாட்டு மைதானத்தில், செல்லமுத்து மகனான சூா்யாவுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்நேரத்தில் அங்கு வந்த மா்மக் கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனால், பலத்த காயமடைந்த வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த சூா்யா பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

பெரம்பலூரில் கழுத்தை அறுத்து கொலை: 6 பேர் கைது.

குடலை எளிதாக சுத்தம் செய்ய…

தகவலறிந்த, பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். இதுதொடா்பாக பெரம்பலூா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம், மா்ம கும்பல் குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: