குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.

68

குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

குன்னம் அருகேயுள்ள எழுமூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் கோவிந்தசாமி (27). அதே கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியன் (37). இவா்கள் இருவரும் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகின்றனா். இந்நிலையில், மேற்கண்ட இருவரது வீட்டின் பூட்டுகளையும் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 20,600 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். தகவலறிந்த குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: