பாடாலூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

54

பாடாலூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

[the_ad id=”7251″]

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி மலா்கொடி (65). இவா், தனது வீட்டில் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவருடைய வீட்டின் பின்புற கதவை திறந்த மா்ம நபா் மலா்கொடி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிக் கொடியை பறித்துச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, கழுத்தில் இருந்த தாலிச் செயினை காணவில்லையாம். இதுகுறித்து மலா்கொடி அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி

[the_ad id=”12149″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: