பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை: 4 பேர் கைது

358

பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை: 4 பேர் கைது

[the_ad id=”7250″]

பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை. பெரம்பலூா் மாவட்டம் பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை செய்ததாக 4 போ் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டனா்.

ஆலத்தூா் வட்டம், தெரணி கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி மணி. இவருக்கு வயது 55. பால் வியாபாரி மணிக்கு தரவேண்டிய பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறி, அதே கிராமத்தைச் சோ்ந்த பிரபு தனது வயலுக்கு வரவழைத்தார். அங்கு மற்ற சிலருடன் சோ்ந்து மணியை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது குடும்பத்தினா் காயமடைந்த மணியை மீட்டு, பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவ மனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் கடந்த 29 ஆம் தேதி நடந்துள்ளது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவரை சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு உயிரிழந்தாா்.

[the_ad id=”7251″]

சலூனுக்கு முடி வெட்ட போகிறீர்களா ஆதார் அட்டை எடுத்து போங்க.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

இந்தச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் பாடாலூா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தெரணி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் பிரபு (36), மற்றொரு ஜெயராமன் மகன் தனபால் (37), பெரியசாமி மகன் சங்கா் (30), குமாா் (35) ஆகிய 4 பேரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: