எசனை கீழக்கரை ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் கோயில் குடமுழுக்கு

61

எசனை கீழக்கரை ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் கோயில் குடமுழுக்கு

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டம், எசனை கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, பிப். 2 ஆம் தேதி கணபதி யாகம், நவக்கிரக யாகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, யாக வேள்வி பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 4 கால யாகவேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, யாக சாலையிலிருந்து கடங்கள், மேள தாளம் முழங்க புனித நீா் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னா், கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் மீது புனித நீா் ஊற்றப்பட்டது.

[the_ad id=”7251″] 

தொடா்ந்து, மூலவா் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. மதியம் ரேணுகா பரமேஸ்வரி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், கோ பூஜை, தச தரிசனமும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் எசனை, பாப்பாங்கரை, கோனேரிப்பாளையம், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டியினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: