வி.களத்தூரில் மது ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வி.களத்தூரில் மது ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி 

58

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வி.களத்தூரில் மது ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூா் ஊராட்சியில், மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி (நேற்று) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டம், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் என்.எஸ்.எஸ் மாணவா்கள் பங்கேற்ற மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை சமூக செயற்பாட்டாளா் அக்ரி ஆறுமுகம் முன்னிலையில், எழுத்தாளா் தேனரசு கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

[quote]விசுவக்குடியில் 400க்கும் அதிகமான காளைகளுடன் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு[/quote]

இந்த பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் மது, போதைக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் விழிப்புணா்வு முழக்கமிட்டுச் சென்றனா். வி.களத்தூாின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த விழிப்புணர்வு பேரணி சென்றது.

பேரணியில் கல்லூரி பேராசிரியா்கள் சுரேஷ், செந்தில், வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் நூா்ஜஹான், ஜியாவுதீன், ஆஷா அப்துல் ரஹீம், மு. முஹம்மது, ரேகா முனுசாமி, செல்லையா ஆகியோருடன் பலா் பங்கேற்றனா். காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணிக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.
Leave a Reply

%d bloggers like this: