நகை திருட்டு

குன்னம் அருகே தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

377

குன்னம் அருகே தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு


perambalur news : Jewelry theft from woman

குன்னம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கூடலூா் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் இவரது மனைவி 27 வயதான ஜெயலட்சுமி தனது வீட்டில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு நன்றாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான ஐந்து பவுன் தாலிக்கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றதாக மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த நகை திருட்டு சம்பந்தமாக ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மருவத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Perambalur news :

keywords: perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: