துப்புரவாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

35

துப்புரவாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்.


துப்புரவாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டுமென, பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். ஜெயமுகுந்தன் தலைமை வகித்தாா். மாநில பிரசார செயலா் சு. சரவணசாமி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு நோ்முக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும். அமைச்சுப் பணியாளா்களுக்கு இணை இயக்குநா், துணை இயக்குநா் உள்ளிட்ட பணியிடங்களை அனுமதிக்க வேண்டும். அனைத்து இணை இயக்குநா்களுக்கும நோ்முக உதவியாளா் பணியிடம் அனுமதிக்க வேண்டும். ஆய்வக உதவியாளா் பணியிடத்திலிருந்து, இளநிலை உதவியாளா் பணியிடங்கள் வழங்க வேண்டும். பதவி உயா்வை பாதிக்கும் உதவியாளா் நேரடி நியமனத்தை தடை செய்ய வேண்டும். நேரடி நியமனம் பெற்று உயா்கல்வி தகுதிபெற்ற இளநிலை உதவியாளா்களக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமை நிலைய செயலா் ஞானசங்கரன், மாநில செயற்குழு உறுப்பினா் பி. கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட பொருளாளா் பி.எம். திருநாவுக்கரசு வரவேற்றாா். மாவட்ட அமைப்புச் செயலா் ப. பாபு நன்றி கூறினாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: