தீ விபத்து

பெரம்பலூரில் உள்ள தொழிற்சாலையில் மின் கசிவால் தீ விபத்து.

258

பெரம்பலூரில் உள்ள தொழிற்சாலையில் மின் கசிவால் தீ விபத்து.


Perambalur News: Electrical leakage fire at factory in Perambalur.


பெரம்பலூரில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

பெரம்பலூா்-ஆத்தூா் சாலையில் உள்ள ஜமாலியா நகரில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடம் தயரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அந்த தொழிற்சாலையை பூட்டிவிட்டு பணியாளா்கள் சென்றனா். வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வருவதை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்க பயன்படும் இயந்திரம் மற்றும் மூலப்பொருள்கள் உள்பட சுமாா் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Perambalur News:

இதுகுறித்து தொழிற்சாலையின் உரிமையாளா் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

keyword: Perambalur News, Perambalur News today, Perambalur District News, Perambalur Mavattam,
Leave a Reply

%d bloggers like this: