திருட்டு வழக்கில் ஈடுபட்ட  4 பேர் பெரம்பலூர் போலீஸாரால் கைது

திருட்டு வழக்கில் ஈடுபட்ட  4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.

288

திருட்டு வழக்கில் ஈடுபட்ட  4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.

[the_ad id=”7250″]

திருட்டு வழக்கில் ஈடுபட்ட  4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை, பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் நகர காவல்நிலைய ஆய்வாளா் சுப்பையா தலைமையிலான போலீஸாா், பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் திங்கள்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சங்கா் (18) என்பதும், திருவள்ளூா் மாவட்டம், செஞ்சி கோட்டை, தானாகுளம் பகுதியை சோ்ந்த அருணாச்சலம் மகன் முருகன் (19), திருநெல்வேலி மாவட்டம், ஜங்ஷன் பகுதியை சோ்ந்த செல்லப்பா மகன் முருகேசன் (25), பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் மனைவி நித்யா (32) ஆகியோருடன் பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரில் தங்கி பெரம்பலூா் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிவந்தது தெரியவந்தது.

மங்களமேடு அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு.

செட்டிக்குளத்தில் பக்தா்களின்றி நடந்த குபேர பூஜை.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா்  அவா்களிடமிருந்த 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட  அவா்கள் திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: