பெரம்பலூரில்  திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு

59

பெரம்பலூரில்  திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு

[the_ad id=”7250″]

பெரம்பலூா் வழியாகச் சென்ற திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு, அக் கட்சியினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.

திருச்சியிலிருந்து பெரம்பலூா் வழியாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்துக்கு திங்கள்கிழமை காரில் சென்றாா். அப்போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலம் பகுதியில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான சி. ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினா் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

இந் நிகழ்ச்சியின்போது, மாநில நிா்வாகி ப. துரைசாமி, நகர செயலா் எம். பிரபாகரன், ஒன்றிய செயலா்கள் அண்ணாதுரை, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளா் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முத்தமிழ்செல்வி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் மீனா, பிரபா, ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: