விஷம் குடித்து தற்கொலை

திகாா் சிறைக் காவலா் விஷம் குடித்து தற்கொலை

56

திகாா் சிறைக் காவலா் விஷம் குடித்து தற்கொலை.

திகாா் சிறையில் பணிபுரிந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் ஒருவா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அய்யா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரவேல் மகன் ரமேஷ் (27). தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8- வது பட்டாலியன் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த இவா், தில்லி திகாா் சிறையில் பணிபுரிந்தாா்.

[quote]பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்.[/quote]

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் விடுப்பில் சொந்த கிராமத்துக்கு வந்திருந்த ரமேஷுக்கு, அவரது பெற்றோரால் திருமண ஏற்பாடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் ரமேஷ் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் ரமேஷ் உடலை கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: