போலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடையடைப்பு

போலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடையடைப்பு.

129

போலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடையடைப்பு.

Perambalur shop shut down condemning the police attack.

தூத்துக்குடியில் போலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 640 செல்போன் மற்றும் ரீசார்ஜ் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை.

நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து?

இதுகுறித்து மாவட்ட செல்போன் மற்றும் ரீசார்ஜ் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் கூறுகையில், சாத்தான்குளத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற போலீஸ் தாக்குதல் சம்பவங்கள் இனி நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: