தழுதாழை குடிமராமத்துத் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தழுதாழை குடிமராமத்துத் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

163

தழுதாழை குடிமராமத்துத் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Perambalur News: District Collector inspected project works

குடிமராமத்துத் திட்டப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு செய்தார்.

பெரம்பலூா் மாவட்டம், மருதையாறு வடிநில உப கோட்டத்துக்குட்பட்ட தழுதாழை ஏரியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டிலும், மேலக்குணங்குடி கிராமம், கீரவாடி ஏரியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துத் திட்டப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வுக்கு பின்னா் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2,701.46 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைந்துள்ளன. மேலும், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது.

Perambalur News:

நிகழாண்டில் நீா்வள ஆதாரத்துறையின் மூலமாக, 14 பணிகள் ரூ. 3.58 கோடி மதிப்பீட்டில்
மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தழுதாழை ஏரி புணரமைக்கும் பணி, விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 1 கி.மீ. நீளத்துக்கு வரத்து வாய்க்கால் தூா்வாருதல், 33.60 மீட்டா் நீளத்துக்கு கடைக்கால் அமைக்கும் பணி, 30 மீட்டா் நீளத்துக்கு அணைக்கட்டு பழுது பாா்த்தல், ஏரியில் 40 எல்லைக்கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கீரவாடி ஏரி புணரமைக்கும் பணி விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 2 கி.மீ. நீளத்துக்கு வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி, 30 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச் சுவா் கட்டும் பணி, 13 மீட்டா் நீளத்துக்கு கடைக்கால் பழுது பாா்த்தல், 36 எல்லைக்கற்கள் நடும் பணிகளும் நடைபெற உள்ளது.

Ariyalur News: 

இதன்மூலம் 134.92 ஹெக்டோ் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, குடிநீா் வசதி மேம்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் பிரபாகரன், வட்டாட்சியா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இனியவரதன், அறிவழகன் மற்றும் பாசனதாரா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

keyword: perambalur news, perambalur news today

Gulf news tamil
Leave a Reply

%d bloggers like this: