தமுமுக வின் முயற்சி: சவுதியில் இறந்தவரின் உடல் அரசலூர் வந்தது.

தமுமுக வின் முயற்சி: சவுதியில் இறந்தவரின் உடல் அரசலூர் வந்தது. 

439

தமுமுக வின் முயற்சி: சவுதியில் இறந்தவரின் உடல் அரசலூர் வந்தது.

Perambalur news: The body of the deceased came from Saudi.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரின் முயற்சியினால் மூன்று மாதங்களுக்கு முன்பாக சவுதியில் இறந்தவரின் உடல் அரசலூருக்கு கொண்டு வரப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரை சார்ந்த கந்தன் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணியிலிருந்தார். 57 வயதான இவர் சவுதியில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துவிட்டார். Perambalur news today

செய்தி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி உடலை தாயகம் கொண்டுவரக் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விமான போக்கு வரத்துத் தடை செய்யப்பட்டிருந்ததால் அவரது உடல் கொண்டு வருவதில் தாமதமானது.

இந்த நிலையில் கந்தனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு உடலை இந்தியா கொண்டு வர உதவி கேட்டனர். அதைத் தொடர்ந்து தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி, சவுதி மண்டல தமுமுக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு உடலைக் கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டனர். சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பேசி கந்தனின் உடலைச் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் கார்கோ விமானம் மூலமாக அனுப்பிவைத்தனர். Perambalur today news

விமானத்தில் உந்த உடலைச் சென்னை விமான நிலையத்திலிருந்து முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சில் ஏற்றி மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஹயாத் பாஷா, மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தமுமுக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்டோர் உடலை அரசலூர் கிராமத்திற்குக் கொண்டுவந்து குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அங்குக் கந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கந்தனின் உடலை அரசலூர் கொண்டு வர உதவிய தமுமுகவினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். Perambalur district news.

tag: perambalur, Perambalur news today, Perambalur today news, Perambalur district newsLeave a Reply

%d bloggers like this: