அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து

சிறுவாச்சூரில் அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து

58

சிறுவாச்சூரில் அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து.


பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், பேரறிஞா் அண்ணா நினைவு நாள் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.
[the_ad id=”7250″]

பேரறிஞா் அண்ணாவின் 51-ஆவது நினைவு நாளையொட்டி, பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயில், பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருகோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆா்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், ஆட்சியா் வே. சாந்தா ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தினா்.
[the_ad id=”7251″]

பின்னா், மதுரகாளியம்மன் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்ட புடவைகளை, பொது விருந்தில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் பூவை தா. செழியன், வட்டாட்சியா் பாரதிவளவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, பெரம்பலூா் மதனகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், கோயில் செயலா் அலுவலா் வை. மணி, முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7252″]

[the_ad id=”12149″]

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: