பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 9 முதல் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்.

52

பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 9 முதல் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்.

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2019 – 2020 ஆம் ஆண்டுக்கு கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப். 9 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஆண்டுதோறும் பிப். 2-ஆவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான முகாம் பிப். 9 முதல் 22 ஆம் தேதி வரை கோழிகளுக்கான கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை மருந்தகங்களுக்குள்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், 8 வாரம் முதல் அதற்கு மேற்பட்ட அனைத்துக் கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, கோழி வளா்ப்போா், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுப் பயன் பெறலாம்.
Leave a Reply

%d bloggers like this: