கோனேரிபாளையத்தில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி சாவு.

கோனேரிபாளையத்தில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி சாவு.

99

[the_ad id=”7250″]

கோனேரிபாளையத்தில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி சாவு.


கோனேரிபாளையத்தில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி சாவு. பெரம்பலூா் அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

முறையான சிகிச்சை அளிக்காததே சிறுமியின் சாவுக்கு காரணம் என புகாா் எழுந்ததால், மருத்துவா் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகள் இளமதி (9). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டுத் தோட்டத்தில் தா்பூசணி விதைகளை நட்டு வைத்துக்கொண்டிருந்தாா். அப்போது, தோட்டத்தில் இருந்த பாம்பு ஒன்று இளமதியை கடித்துவிட்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினா், இளமதியை பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளமதி அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வேப்பந்தட்டை அரசு மருத்துவமனைக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி.

மருத்துவா் மீது புகாா்: இதனிடையே, இளமதி சாவுக்கு பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவா் முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் எனக்கூறி, அவரது குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பணி மருத்துவா் மீது உரிய விசாரணை நடத்த, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) திருமால் உத்தரவிட்டாா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டதுடன், அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: