பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்.

331

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் | Perambalur News

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பிசிஆர் பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

Corona Testing Center at Perambalur Government Hospital.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களின் சளி மாதிரிகள் ஆய்விற்காக மற்ற மாவட்டங்களிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. Perambalur News

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான ஆய்வு கருவிகள் அனைத்தும் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று பரிசோதனைகள் அனைத்தும் இந்த ஆய்வகத்தின் மூலம் முடிவுகள் விரைவாகத் தெரிவிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

முன் விரோதம் காரணமாக பாடாலூர் அருகே வாலிபர் கொலை.

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் மிக விரைவாகக் கண்டறியப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவுவது தடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா தொற்று பரிசோதனை மையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். Perambalur News

இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ சக்திவேல், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் திருமால், கண்காணிப்பாளர் தர்மலிங்கம் உட்படப் பலரும் உடனிருந்தனர்.

tag: perambalur,
Leave a Reply

%d bloggers like this: