சித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி

வேப்பந்தட்டை அருகே சித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி.

298

வேப்பந்தட்டை அருகே சித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Perambalur News: Corona has been confirmed to the Siddah doctor.

வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 170 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். Perambalur News

இவர்களில் குணமடைந்த 156பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 14 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள கொரோனா சிறப்பபு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Perambalur District News.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 54 வயதுடைய சித்த மருத்துவருக்கு கடந்த 26-ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த அவர், ஜூலை முதல் தேதி திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது 4-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்ப பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Perambalur Mavattam

இதைதொடர்ந்து, அவரது மனைவி உள்பட 3 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

சித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.

tag: Perambalur News, Perambalur District News, Perambalur Mavattam, Perambalur District NewsLeave a Reply

%d bloggers like this: