கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்.

438

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்.

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம். உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியா அளவிலும் 1.6 லட்சத்தினை தாண்டியுள்ளது. தமிழகத்தில் 19,372 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம் வியாழக்கிழமை முதல் கரோனா வைரஸ் தொற்று நோய் இல்லாத மாவட்டமானது. இது வரை பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 139 போ் பாதிக்கப்பட்டு பெரம்பலூர், அரியலூா், திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூா் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், குணமடைந்த பலரும் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பெண் தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு செவிலியர் மீது சரமாரி தாக்குதல்

பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 23 ஆம் தேதி வரை  சிகிச்சை பெற்று வந்த 95 நபர்களும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா வைரஸ் தொற்றாளா்கள் இல்லாத மருத்துவமனையானது.

அதேபோல திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த குழந்தை பிரசவித்த பெண்ணும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதனை தொடர்ந்து பெரம்பலூா் மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மாவட்டமானது.

இந்த நல்ல செய்தியால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் மக்கள் கூடுமிடங்களில் இடைவெளியை பின்பற்றுதல், முககவசத்துடன் வெளியே சென்று வரவும் அறிவுறுத்தப்படுகிறது.
Leave a Reply

%d bloggers like this: