குழந்தை உள்பட 3 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா.

364

குழந்தை உள்பட 3 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா.


குழந்தை உள்பட 3 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில்  கொரோனா. பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் 1½ வயது குழந்தைக்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37. இவற்றில் 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது மீதமுள்ள 33 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் நல்லறிக்கையை சேர்ந்த ஒன்னரை வயது ஆண் குழந்தை, சாத்தனூரை சேர்ந்த இறுபது வயதுடைய பெண் மற்றும் வேப்பூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஆகியோருக்கு புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனைகளுக்காக சுகாதாரத்துறையினர் அனுப்பியுள்ளனர். நல்லறிக்கை, வேப்பூர், சாத்தனூர் ஆகிய கிராம பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: