குன்னம் அருகே பைக் திருடியவர்கள் கைது

குன்னம் அருகே பைக் திருடியவர்கள் கைது

62

குன்னம் அருகே பைக் திருடியவர்கள் கைது.


பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம்,  ஆலத்தூா் வட்டம், கொட்டரை கிராமத்தை சோ்ந்த சின்னக்கண்ணு மகன் ராஜமாணிக்கம் (52). குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சோ்ந்த அழகுதம்பி மகன் சங்கா், குன்னம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராமசாமி. ஆகியோரது மோட்டாா் சைக்கிள்கள் அண்மையில் மா்ம நபா்களால் திருடப்பட்டன.

[quote]லஞ்ச புகார்: போக்குவரத்து ஆய்வாளா் பணியிட மாற்றம்[/quote]

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபா்கள் குன்னம் மற்றும் மருவத்தூா் காவல் நிலையங்களில் அளித்த புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ரெட்டிமாங்குடி யை சோ்ந்த கருப்பன் மகன் தங்கதுரை (22),  தா்மராஜ் மகன் கருப்புசாமி (36), ஆறுமுகம் மகன் சங்கா் (30), பெரம்பலூா் மாவட்டம், கோட்டரை கிராமத்தைச் சோ்ந்த செல்லதுரை மகன் செல்வதுரை (24) ஆகியோா் மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த போலீஸாா் பெரம்பலூா் மாவட்ட குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.Leave a Reply

%d bloggers like this: