குன்னம் அருகே குத்தகைதாரரை மீறி மீன் பிடித்த பொதுமக்களால் பரபரப்பு.

330

[the_ad id=”7250″]

 

குன்னம் அருகே குத்தகைதாரரை மீறி மீன் பிடித்த பொதுமக்களால் பரபரப்பு.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கரில் உள்ள ஏரியில் தண்ணீர் வற்றும் போது, மீன் பிடிக்க குத்தகைக்கு விடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி குத்தகையை ரூ.3 லட்சத்திற்கு அரியலூரை சேர்ந்த மணிவேல் என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மணிவேல் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு, வளர்த்து பராமரித்து வந்தார். இந்நிலையில் மீன்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை அளவிற்கு வளர்ந்திருந்த நிலையில் மணிவேல் வருகிற 6-ந்தேதி மீன் பிடிப்பதற்காக காத்திருந்தார்.

[the_ad id=”7251″]

பயணிகளுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை கொண்டு இலவசமாக மாஸ்க் வழங்கும் நடத்துனர்.

புதுக்கோட்டை அருகே மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள் கைது

இந்நிலையில் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் கொடுத்த தகவலின் பேரில் மீன் பிடிப்பதற்காக குழுமூர், துங்கபுரம், ஓலைப்பாடி, திம்மூர், அகரம்சிகூர், அத்தியூர், வடக்கலூர், ஒகளூர், நன்னை, வேப்பூர், பெருமத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலை ஏரியின் அருகே திரண்டனர். அப்போது அங்கு ஏரியில் காவலுக்கு இருந்த குத்தகைதாரர் மணிவேல், பொதுமக்களை தடுத்தும், அவர்கள் யாரும் கேட்காமல் ஏரிக்குள் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர்.

இதைப்பார்த்த மணிவேல் மனமுடைந்து ஏரிக்கரையில் அழுது புரண்டார். இந்த சூழ்நிலையில் மீன்பிடிக்க வந்தவர்களின் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை யாரோ தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் தாசில்தார் சின்னதுரை மற்றும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் ஏரி குத்தகைதாரர் மணிவேலையும், எரிந்த மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளின் உரிமை யாளர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறும் போலீசார் தெரிவித்து விட்டு சென்றனர்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: