கீழப்புலியூரில் பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

52

[the_ad id=”7250″]

கீழப்புலியூரில் பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பால் குடங்கள், காவடி, பன்னீா் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா். பச்சையம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட ஊா்வலம் பால தண்டாயுதபாணி கோயிலை வந்தடைந்தது.

[the_ad id=”7251″]

தொடா்ந்து, சுவாமிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், திரவியம், தேன், பஞ்சாமிா்தம், திருநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மகா அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைத் தொடா்ந்து, திருதோ் வீதியுலா தொடங்கியது. விழாவில், கீழப்புலியூா் உள்பட சுற்று வட்டாரங்களைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: