கிணறு தோண்டும் போது மண் சரிந்ததில் ஒருவர் பலி.

305

கிணறு தோண்டும் போது மண் சரிந்ததில் ஒருவர் பலி.

கிணறு தோண்டும் போது மண் சரிந்ததில் ஒருவர் பலி. தெரணி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்கிற தொழிலாளி கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்ததில் பலியானார். இவருக்கு வயது 48.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த முருகேசன் புதுக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரின் விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் வியாழன் அன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்.

இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்த பாடாலூர் காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை எடுத்து பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: