காதல் திருமண தகராறு: குன்னம் அருகே இளைஞர் குத்தி கொலை.

காதல் திருமண தகராறு: குன்னம் அருகே இளைஞர் குத்தி கொலை.

317

காதல் திருமண தகராறு: குன்னம் அருகே இளைஞர் குத்தி கொலை | perambalur news

குன்னம் அருகே காதல் திருமண தகராறில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Love marriage dispute: Youth stabbed to death near Kunnam.

குன்னம் அருகே  திம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் திவ்யா (22). அதே கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வக்குமார்(25). இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர்.

திவ்யாவின் அண்ணன் பாலமணிகண்டன் (24), தனது தங்கையின் காதல் கணவர் செல்வக்குமாரிடம் 22ஆம் தேதி இரவு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை பாலமணிகண்டன் கத்தியால் குத்த முயன்றார். அதை செல்வக்குமார் தடுக்க முயன்ற பொது அவர் மீது கத்தி குத்து விழுந்தது. Perambalur News

இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் காவலர்கள் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாலமணிகண்டனை கைது செய்தனர். Perambalur News

இந்த கத்தி குத்துக்கு காரணமாக இருந்த பாலமணிகண்டனின் பெற்றோர்கள் மற்றும் திவ்யாவின் வீட்டிற்கு எதிரே குடியிருக்கும் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது வழக்கு பதிவு செய்ய கூறி செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். Perambalur News

காதல் திருமண தகராறு விஷயத்தில் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: