ITI's new building

காணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.

182

காணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.


Perambalur News:  ITI’s new building inaugurated through video conference.


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதடி கிராமத்தில் எம்ஜிஆர் நகரில் புதிதாக ரூபாய் 4.53 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து மருதடி புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா மற்றும் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

புதிய ஐ.டி.ஐ கட்டிடத்தில் ஆறு ஒர்க்சாப் வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகள் மேலும் கணினி ஆய்வகம், நூலகம், முதன்மை மற்றும் பயிற்றுநர்களுக்கான அறைகளுடன் ஓய்வு கழிப்பிட அறைகளும் உள்ளன. 2014-ல் துவங்கிய இந்த ஐ.டி.ஐ தற்போது 220 மாணவர்களை கொண்டுள்ளது. இதில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், மெக்கானிக் படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

Perambalur News:

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரியதர்ஷினி, ஆலத்தூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுகந்தி, நாரணமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

keyword: Perambalur News




Leave a Reply

%d bloggers like this: