பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.

685

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு | Perambalur News Today

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.

Sickle cut for college student near Perambalur.

குரும்பலூர் நடுத்தெருவைச் சேர்ந்த அன்புச் செல்வனின் மகன் மதன் பிரபு. 22 வயதான இவர் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகன் பிரசாந்த். 25 வயதான இவர் மினி பஸ்சில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். Perambalur News Today

வங்கியின் மூலம் ஏலத்திற்கு வந்த செல்வம் என்பவரின் வீட்டை மதன் பிரபு ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்த வீடானது பிரசாந்த்தின் உறவினர் செல்வம் என்பவருடையதாகும். Perambalur News

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

நிழற்குடையா..ஓய்வறையா…? பெரம்பலூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.

இதற்கிடையில் நிலுவையிலிருந்த தொகையை பிரசாந்த் வங்கியில் செலுத்திக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செல்வம் பெயரிலிருந்து தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டார்.

இதனால் அடிக்கடி மதன் பிரபுவுடன் தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். மீண்டும் நேற்று மாலை குரும்பலூர் விநாயகர் கோவில் அருகே தனது நண்பர் நிரஞ்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பிரசாந்த் வழிமறித்து மதன் பிரபுவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த மதன் பிரபு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். Perambalur News Today

இந்த சம்பவம் சம்பந்தமாக மதன் பிரபு பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பையா வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரசாந்த்தைத் தேடிவருகின்றனர்.

tag: perambalur

nattu marunthu kadai perambalur
Leave a Reply

%d bloggers like this: