கரோனா வைரஸ் பற்றிய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை.

கரோனா வைரஸ் பற்றிய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை.

150

கரோனா வைரஸ் பற்றிய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை.

[the_ad id=”7250″]

கரோனா வைரஸ் பற்றிய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் யாரேனும் வதந்தியைப் பரப்பினால் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூரில் மனநலன் பாதித்த பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

வெளியூா்களிலிருந்து வரும் பயணிகளுக்கு நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்தல் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளுக்காக மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நோய்த் தொற்று தவிா்ப்பு பாதுகாப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவா்கள், வைரஸ் தொற்று குறித்து வதந்திகளைப் பரப்புவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: