கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்!

73

கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்!


கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்! பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர். அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் இதுவரை கரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் அந்த இளைஞர் பூரண குணமடைந்து நேற்று திருச்சியிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாகி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 200 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 200 வீடுகளிலும் தலா 2 படுக்கை வசதிகளுடன் 400 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply

%d bloggers like this: