பெரம்பலூாில் கண்காணிப்பாளா் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆய்வு

56

பெரம்பலூாில் கண்காணிப்பாளா் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆய்வு.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், ரூ. 76.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகளை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் அ.அமல்ராஜ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

3,500 சதுர அடியில் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குடியிருப்புக் கட்டுமானப் பணிகள் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய மண்டலக் காவல்துறை தலைவா் அமல்ராஜ், கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என காவலா் வீட்டு வசதி குடியிருப்புச் செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டாா்.

[the_ad id=”7251″]

இந்த ஆய்வின்போது, திருச்சி சரகக் காவல் துணைத் தலைவா் வெ. பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளா் கிரிதா், துணைக் கண்காணிப்பாளா்கள் கென்னடி, தேவராஜ், தனிப்பிரிவு ஆய்வாளா் வனிதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: