பெரம்பலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி கோரி மனு.

பெரம்பலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி கோரி மனு.

233

பெரம்பலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி கோரி மனு.

tamil news: Petition seeking permission to open driving schools in Perambalur.

பெரம்பலூர் மற்றும் அரியலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி பெற்றுத்தர வேண்டி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வனிடம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவித்துள்ள இந்நிலையில் தங்களது ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளனர்.

எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம்.

வெப்பூர் ஏரியில் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்.

இது குறித்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் பாலு, குழந்தைவேல், பொருளாளர் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சாந்தா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியதாவது:

கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்து வந்த நிலையில் தற்போது சில தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் வருமானமின்றி இருக்கின்றோம்.

சமூக இடைவெளியுடன் அரசு கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக ஓட்டுநர் பயிற்சி அளிப்பது, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் மற்றும் புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகியவற்றையும் நடைமுறைப் படுத்து அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

tag: tamil news, tamil news daily, perambalur, perambalur news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: